Tuesday, March 31, 2009

அசின் கடத்தப்பட்டார்



தனது உதவியாளரை கடத்தி மறைத்து வைத்துக் கொண்டு இல்லையென்று சொல்லிவ வந்த அசின் நேற்று இரவு 12.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டதாக அவரது தந்தை இன்று காலை பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்துள்ளார்.
அந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது
கடந்த சில வாரங்களாக அசினின் உதவியாளரை காணவில்லை என்று அவரது தாயார் பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்திருந்தார் அதனைத் தொடர்ந்து அவரைத் தேடி மும்பாய் தூத்துக்குடி சென்னை ஆகிய இடங்களில் அவர் தங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து சிறப்பு படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இதை அடுத்து நேற்று இரவு அசின் இந்திப் படசூட்டிங்கை முடித்து விட்டு வீடு திரும்பியவேளை வீட்டு வாசலில் வைத்து ஆயுதம் தாங்கிய நபர்கள் அவரைக் கடத்திச் சென்றதாக அவரது கார் சாரதி தெரிவித்தார்.
இந்த செய்தி முழுவதும் ஏப்ரல் 1 ஆம் திகதியான முட்டாள் தினத்தில் முட்டாள் அனைவருக்காகவும் வெளியிடப்படுகின்றது.

Monday, March 30, 2009

ஈழத்தமிழனைக் காப்பாற்றுவதற்கு யாருமில்லையா?


ஈழத்தமிழனின் வாழ்க்கை இன்று மிகவும் கொடூரமான மூர்க்கத்தனமானஈவிரக்கமற்ற தாக்குதல்களால் இன்று அன்றாடம் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்து கொண்டிருக்கின்றது.
அண்மையில் இணையத் தளமொன்றில் ஏறிகணைத் தாக்குதலால் இரண்டு கால்களையும் இழந்து வைத்திய சாலை வளாகத்திலேயே உயிரை விடுகின்ற இளைஞனை பார்த்தபோது சர்வதேசம் இலங்கை அரசாங்கத்திற்கு பயந்துதான் இருக்கின்றது என்று எண்ணத்தோன்றுகின்றது.
(அந்த வீடியோ இங்கே
பலவீனமான இதயம் கொண்டவர்கள்
இதைப் பார்க்க வேண்டாம்)
http://www.tamilkathir.com/news/1279/75//d,video.aspx
அமெரிக்கா பிரிடடன் போன்ற நாடுகள் இலங்கைக்கு கண்டனங்களையும் அறிக்கைகளையும் விட்டுக்கொண்டிருக்கின்றன ஒழிய அந்த நாடுகளின் செயல் வடிவங்கள் ஒன்றும் முற்றுப்பெறவில்லை.
சீனாவும் ராஷ்யாவும் இலங்கைக்கு எதிராக ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன.ஈழத்தில் இடம் பெறுவது ஒரு இனப்பிரச்சினை அதை சீனா ஒரு மதப்பிரச்சினை வடிவிலேயே கையாழ்கின்றது.
சீனா புத்த மதத்தைக் கடைப்பிடிப்பதால் தனது மதத்தை கடைப்பிடிக்கும் இலங்கைக்கு அது ஆதரவு வளங்குகின்றது.இலஙகையில் தங்களது தளங்களை நிறுவவதற்கு இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.அதை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இலங்கை இந்தியாவிடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் ஆயுதங்களை கொள்வனவு செய்கின்றது.
இந்தியாவோ ஒரு படி மேல் தனது இராணுவத்தை நான்காம் கட்ட ஈழப்போருக்கு (தமிழர்களை பூண்டோடு அழிக்கும் போருக்கு) அனுப்பிவைத்திருக்கின்றது.
வல்லரசாக முயலும் இந்தியா இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழித்தால்தான் . தான் ஆசிய பிராந்தியத்தில் வல்லரசாக திகழமுடியும் . விடுதலைப் புலிகள் முப்படைகளையும் உடைய ஒரு வலுப்பெற்ற ஒரு அமைப்பாக இருப்பதால் தங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று நினைத்துக்கொண்டு இலங்கைக்கு ஆதரவு என்ற பெயரில் தமிழனை அழிக்கும் இலங்கை அரசின் கொள்கைக்கு துணை போகின்றது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் இப்போது தேர்தல் காலம் ஈழப்பிரச்சினை என்பது அவர்களது தேர்தல் கால கொள்கையாகவே வெளியிடப்படுகின்றது.
ஈழத்தமிழனின் பிரச்சினை என்ன தேர்தல் அறிக்கையா?முத்துக்குமார் தீக்குழிப்பு அதனைத் தொடர்ந்து எத்தனை தீக்குளிப்புக்கள் அத்தனைபேரின் உயிர்கள் ஈழத் தமிழனுக்காக.
கட்சி ரீதியான தீக்குழிப்புக்கள் இனி தேர்தல் கால பிரச்சாரத்தில் முதன்மை வகிக்கப்போகின்றது.ஏன் என்றால் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மைக் கட்சிகள் அனைத்திலும் இருந்து ஒருவர் இருவர் என்று தீக்குழித்துவிட்டார்கள்.
என்ன செய்தோம் என்பதை விட என்ன செய்கின்றோம் என்பதுதான் முக்கியம்.உலகத் தொலைக்காட்சிகளும் செய்தி நிறுவனங்களும் இன்று தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் அக்கிரமங்களையும் வெளியிட்டு வருகின்றன.ஆனால் ஈழத்தமிழர்களாலாலேயே வாழ்கின்றது சன் ரி.வியும் கலைஞர் ரி.வியும் ஆனால் அன்றாடம் கொல்லப்படும் தமிழர்களைப் பற்றி என்ன செய்கின்றது இந்த ஊடக நிறுவனங்கள்.
வெளிநாட்டில் வாழ்கின்றவர்களின் பணத்தில் கலைஞரின் குடும்பம் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றது. மத்திய அரசுக்கு நாங்கள் ஈழப்பிரச்சினை பற்றி சொல்லிவருகின்றோம் என்கிறார் கலைஞர் ஆனால் ஒன்றும் நடந்த பாடில்லை.
சோனியா கருணாநிதியின் சொல்லைக் கேட்கின்றாரா இல்லையா என்று தெரியவிலலை.ஈழத்தில் நடக்கும் போருக்கு இந்தியா இராணுமும் வந்து போரிடுகின்றது. இதுகூட கருணாநிதிக்கு தெரியவிலலையா?மத்திய அரசில் அமைச்சுப் பொறுப்புக்களை பெறுவதற்கு கருணாநிதி காலில் கூட விழுந்து வாங்குவார் போல் தெரிகின்றது.
ஈழத் தமிழனைக்காப்பாற்ற ஒபமாதான் இனி வரவேண்டும் இந்தியாவை நம்பிப் பிரயோசனம் இல்லை.கூட இருந்து குழி பறிக்கின்றது இந்தியா (சோனியா) காலங்கள் மாறும் அப்பொழுது என்ன நடக்கும் ஏது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது ஆவியாகத் திரியும் ஈழத்தமிழன் மீண்டும் மனிதப் பிறவி எடுப்பான்.

Tuesday, March 24, 2009

சம்பிரதாயங்களும் சடங்குகளும்

சடங்குகளும் சம்பிரதாயங்களும் மக்களை வழி நடத்துகின்றதா இல்லை மக்களை சீரழிக்கின்றதா என்று பட்டி மன்றம் வைக்க நான் வரவில்லை அண்மையில் எனக்குத் தெரிந்த ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவத்தைத் தான் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

அண்மையில் தான் அவளுக்கு அவர்களின் ஊர் வழக்கப்படித்தான் திருமணம் நடந்தது. ஆனால் நடந்து இன்னும் இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை அந்த ஊர்வழக்கமும் அவர்களது கலாசாரமும் அவளை என்ன கொடுமைப்படுத்துகின்றது.
திருமணம் ஆகி இரண்டு நாட்கள்தான் தாலி கட்டும்போது மாப்பிள்ளை தாலியை மாற்றிக் கட்டிவிட்டாராம் பெண்ணுக்குக் கட்டாமல் தங்கைக்கு கட்டினதாக நீங்கள் நினைக்க வேண்டாம் தாலி தலைகீழாக கட்டிவிட்டாராம்.
அதற்கும் பெண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் பெண் வீட்டார் நீ வந்த நேரம் தான் இப்படி நடக்கின்றது என்று அவளது முகத்திற்கு முன்னாலே சொல்கின்றனராம்.
நான் கேட்கின்றேன் மாப்பிள்ளை ஒழங்காக தாலியைக் கட்டியிருந்தால் ஏன் இந்தப் பிரச்சினை.
அதற்காக நீங்கள் நினைக்க வேண்டாம் பெண் அழகில்லாதவள் என்று மாப்பிள்ளையை விட பெண் அழகாக இருப்பது தான் அந்த ஊர் மக்களிடமும் அவனது உறவினர்களிடமும் எரிச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றது.
வயது போன பட்டி கூட என்ன கோயில்ல இருக்கின்ற சிலையை கொண்டு வந்து விட்டானா. பொம்மை மாதிரியே இருக்கு.
என்ன இந்தப் பெண் இப்படி மெல்லிசாக இருக்குதே என்று சொல்கின்றார்.
அந்தக் காலத்தில பெண்கள் உரல் குத்திமாதிரியோ தெரியவில்லை.தாலியை
தலைகீழாகக் கட்டியதற்காக முதல் இரவைக் கூட தள்ளி வைத்து விட்டார்கள் என்ன கொடுமை பாருங்களேன்.
பூனை குறுக்கே போனால் பயணத்தை ரத்துச் செய்கின்றார்கள்.காகம் பசியினால் கத்தினால் கூட அதற்கு ஒரு அர்த்தம் கண்டுபிடித்து விருந்தினர் வரப்போகின்றார்கள் என்று சொல்வது.
விதவைப் பெண்களை நற்காரியங்கள் செய்வதற்கு முன்னிலையில் விடுவதில்லை.இப்படியன செயல்களால் பலரது மனங்கள் வேதனைப்படுகின்றது.
ஏன் ஒரு கூட்டத்தில் சமூகத்தில் தள்ளி வைக்கப்படுகின்றார்கள். சம்பிர்தாயங்களைக் கடைப்பிடிக்கின்றோம் என்று என்ன என்ன கொடுமைகளை இந்த சமூகம் செய்து கொண்டிருக்கின்றது.

Friday, March 20, 2009

விஜயின் கோபமும் ஊடகங்களும்

வில்லு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடந்தது அதில் விஜய் ரசிகர்க ளைப் பார்த்து சத்தம்போட வேண்டாம் என்று கோபமாக கத்திய வீடியோ அண்மையில் இணையத்தளங்களில் உலா வந்தது.

அதை உடனே அனைத்து இணையத்தளங்களும் பதிவாளர்களும் தங்களுக்கு ஏதேதோ எழுதி பழி தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.விஜய் அப்படி நடந்திருக்கக்கூடாது. விஜய் அப்படி நடக்கின்றதால் தான் அவரது வீட்டில் ஒவ்வொரு கண்ணாடியும் உடையுது. அவர் சாதுவாக நடித்துக்கொண்டிருக்கின்றார். அவரின் சுயரூபம் தெரிந்துவிட்டது என்றெல்லாம் எழுதுகின்றார்கள்.

அதிலும் விஜயின் இந்த செய்தி போட்டால்தான் தங்களது பதிவை கூடுதலாக பார்க்கின்றார்கள் என்ற போட்டி சில பாதிவாளர்களுக்கு இடையில் இதை அவர்களே தங்களது பதிவில் வேறபோட்டிருக்கின்றார்கள்.

விஜய் ஒரு நடிகர்தான் அதற்காக அவருக்கு கோபம் வரக்கூடாது என்பது அடி முட்டாள்த்தனம் என்று தான் சொல்லலாம்.ஏன் உங்களுக்கு கோபம் வருவதில்லையா? நீங்கள் ஒரு இடத்தில் உரையாடிக்கொண்டிருக்கும்போது மற்றவர்கள் ஒரு லிமிட்டைத்தாண்டி சத்தம் வந்தால் நீங்கள் என்ன பூ பறித்துக்கொண்டு இருப்பீர்களா?என்னடா விஜய்க்கு வக்காளத்து வாக்குகின்றான் என்று நினைக்க வேண்டாம் .

இப்படி ஒரு வீடியோ வந்தவுடன்தான் எனக்கு ஒரு ஞாபகம் வந்து 2004 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜய் சென்றபோது நடந்து சம்பவம் மெட்ரோ நியூஸ் தமிழ் பத்திரிகையில் செய்தி வெளிந்தது. அதன் விவரம் இங்குள்ளது.

விஜய் கொழும்பு வந்தபொழுது டென்சன் என்ற தலைப்பில் வெளிவந்தது.அப்பொழுது விஜய் கோபமாக இருந்ததாவும் இருந்தது.

அது தொடர்பாக அந்த பத்திரிகை நிறுவனத்தை விஜய் ரசிகர்கள் முற்றுகையிட்டு தங்களது தலைவரைப் பற்றி தப்பாக போட்டதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றெல்லாம் நடந்ததாக நான் அறிந்துகொண்டேன்.

(சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தால் முழுவிபரங்களும் வரும்)

ஒரு நடிகர் தான் கோடிக்கணக்கில் காசை வேண்டிக்கொண்டு எவ்வளவுதான் சமூகத்தில் தான் நல்லவன் என்று நடித்துக் கொண்டிருக்க முடியும். இணையத்தளங்களும் பத்திரிகைகளும் வருங்கால முதல்வர் என்ற ரேஞ்சுக்கு கொண்டுவந்துவிடுகின்றார்கள்.ஒரு நடிகன் நடிக்கும் படத்தைப் பற்றியும் அவனது படைப்பைப்பற்றியும் மட்டும் எழுதுங்கள் அவன் அது செய்தான் இது செய்தான் என்று எழுதுவதால்தான் அவர்களும் முதல்வர் கனவை காண முயல்கின்றார்கள் .

Thursday, March 19, 2009

காதலின் பரிமாணங்கள்


காதல் இந்த வார்த்தையை சுவாசிக்காத இதயமும் இல்லை உச்சரிக்காத இதழ்களும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.கண்டதும் காதல்,கேட்டதும் காதல், பார்ததும் காதல், பார்க்காமல் காதல், ரெலிபோன் காதல், ஈமெயில் காதல் என்று காதலின் பரிமாணங்கள் வளர்ந்துகொண்டு தான் செல்கின்றன.


ஆனால் காதல் காதலாவே இருக்கின்றது என்றுதான் சொல்ல முடிகின்றது.எத்தனை பரிமாணவளர்ச்சியைத் தொட்டாலும் இன்று எத்தனை காதல் திருமணத்தில் முடிந்திருக்கின்றது. சரி திருமணத்தில் முடிந்த காதலும் கடைசிவரைக்கும் நிலைக்கின்றதா என்பதுதான் இன்றைய கேள்வி.அதுசரி இவர் பெரிய பருப்பு காதலைப் பற்றி சொல்ல வந்திட்டார் என்று நீங்கள் நினைக்கிறது தெரிகிறது.


சரி வந்த விஷயத்துக்கு வருவோம்.காதலால் பலர் கவிஞர்கள் ஆகின்றார்கள் சிலர் பைத்தியக்காரர்கள் ஆகின்றனர்.


அதிகமாக காதலால் பாதிக்கப்படுவது பெண்களா ஆண்களா என்று கேட்டால் ஆண்கள்தான் என்று பதில் வருகின்றது.ஆனால் பெண்கள் பாதிக்கப்படுவதில்லையா என்றுகேட்டால் பாதிக்கப்படுகின்றார். அவர்கள் தங்களது உணர்வுகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல முடியும்.மனதில் ஏற்பட்ட முதல் காதல் முதல் முத்தம் போன்றது அது ஆணோ பெண்ணோ அவர்களின் இதயத்தில் இருந்து அழிக்கமுடியாது.


ஆனால் அவற்றை அவர்கள் அழித்ததுபோன்று நடிக்கின்றார்கள் என்பதுதான் நிஜம்.காதல் அழிப்பதற்கு ஒன்றும் தூரிகையால் வரைந்த ஓவியம் இல்லை. கற்களில் செதுக்கிய சிற்பம்.இன்று சில பேர் காதல் என்ற பெயரை தங்களது சுயலாபத்திற்காகவே பயன்படுத்திக் கொள்கின்றனர்.


பலர் தமது வாழ்க்கை என்றே கொள்கின்றார்கள்.இன்னும் சிலரோ எதோ ரைம்பாசிங் என்று சொல்கின்றனர்.அவ்வாறு செய்பவரை நீங்கள் இனம் கண்டு ஒதுங்கிக்கொண்டால்.. தேவதாஸ் ஆக மாறமல் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.காதல்... அன்பு ... பாசம் எதோ ஒத்தசொல் எழுதுகிறான் என்று நினைக்கவேண்டாம்.


ஒருவனோ ஒருத்தியோ பழகும்பொழுது முதலில் நட்பாகத்தான் பழகுவார்கள்... அதன் பின் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்படுகின்ற புரிந்துணர்வு ஏன் இவனை நான் கணவனாக அடையக்கூடாது.


இவளை நான் மனைவியாக அடையாக்கூடாது இப்படி அவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணைக்கு ஒரு நல்ல மனிதன் கிடைக்கின்றபொழுது அதை அவர்கள் காதலிக்கின்றார்கள். இதனால் அவர்கள் வெற்றி பெற்று திருமணம் முடிக்கின்றார்கள்.

காதல்... அது சுகமான, சுமையான, இதனாமான, ஒரு சுவை என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.காதலர் தினம் முன்பு வெளிநாடுகளில் கொண்டாடப்பட்டது.


இன்று அது நம்மூரையும் விட்டுவைக்கவில்லை. காதலர் தினத்தில் பல பெண்கள் தங்களது உயிரைப்பிடித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.எவன் வந்து எனக்கு I love you சொல்லப்போறானோ தெரியவில்லையே என்ற பயம்தான்.


தமது காதலை காதலர் தினத்தில் சொல்கிறார்கள். ஏனோ அன்றுதான் அவர் களுக்கு நல்ல நாள் போலும்.தனது மனத்துக்குப்பிடித்தவன் அன்று I love you சொல்வான் என்று ஏங்கிய இதயங்கள் எத்தனை.காதலர்கள் இயற்கையின் அழகை ரசித்திக்கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் ரசிக்க மாட்டார்கள் என்று இல்லை.


காதலர்களுக்கு அது ஒரு தனித்துவம். அந்த இயற்கையில் தங்களையும் இணைத்துக்கொள்வார்கள்.


தனிமையையே கூடுதலாக காதலர்கள் விரும்புகின்றார்கள். நிலவினை ரசிக்கும் காதலர்கள் நீலாம்ரோங்கைவிட விரை வில் சென்று வரக்கூடியவர்கள் என்று தான் சொல்லத்தோன்றுகின்றது.தோல் மீது தோல் சாயும் இந்தக் காதல்......
இந்தக்காதல்......
பொறுங்கோ வாரேன்.....
உணர்வினால் இணையுமா? அல்லது உடலினால் இணையுமா? அல்லது காற்றோடு போய்விடுமா?உணர்வினால் இணையும் காதல்.... ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.... நிமிடங்கள் பொழுதுகள் கற்பனைக்கோட்டையிலே மிதக்கும் இவர்களது காதல்.... அப்படி இவர்களது காதல் வளர்ந்துகொண்டிருக்கும் இவ்வாறானவர் களின் காதல்.... வெற்றிபெறும்.


ஆனால் இவ்வாறவர்களின் காதலும் தோல்வியுறுகிறே என்று நீங்கள் கேட்கிறது எனக்கு புரிகிறது.அவர்கள் எங்கோ ஒரு இடத்தில் தவறை விட்டிருக்கின்றார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.


சிலர் தெரிந்தும் செய்வார்கள் சிலர் தெரியாமல் செய்கிறார்கள். சிலருக்கு தினமும் ஒரே விதமான அன்பு கிடைப்பதை விட திடீர் என்று வித்தியாசமான அன்பு கிடைக்கும் பொழுது அவர்கள் அதன் மீது தாவுகின்றனரே என்று தான் தோன்றுகின்றது.


மனித மனம் குரங்குதானே....தாவாமல் என்ன செய்யும் .அதற்காக உண்மையான காதலர்கள் என்மீது கோபப்படக்கூடாது. நான் முதலிலே சொல்லிட்டேன் இது எனது பார்வை என்று...“உணர்வுகளின் சங்கமம் என்று சொல்லலாம் அவளையோ அவனையோ நீங்கள் நினைக்கும் பொழுது அதே நேரத்தில் அவர்களும் அவ்வாறு உணர்வார்கள் உண்மையான காதல்.


நான்பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்நீ பேச நினைப்பதெல்லாம் நான் பேசவேண்டும்என்ன Situation Song கா என்று நீங்கள் நினைக்கவேண்டும்.


2 அரை மணி நேர படத்திலேயே 6 பட்டு வருது நாமும் இரண்டு வரியை போட்டால் என்ன.....உடல்கள் இணையும் காதல்.....அதற்காக நீங்கள் கேட்கக்கூடாது உணர்வினால் இணைபவர்கள் உடலால் இணையமாட்டார்களா என்றுசிலர் காமத்தையே குறியாக வைத்துக் காதலிக்கின்றார்கள்.


அன்பு எனும் வலையை வீசி எத்தனையோ பெண்களின் ஆண்களின் வாழ்க்கையை நாசமாக்குபவர்களும் இருக்கின்றார்கள்.


இவர்களைப் பற்றி எழுதுவதை விட எழுதாமல் விடுவதே எவ்வளவோமேல் Dating காலாச்சாரம் மூலம் இன்று நமது கலாச்சாரம் மோசமடையவதற்கும் இதுவும் ஒரு காரணம் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.காதலர்கள் காதலியுங்கள்உங்கள் காதல் மற்றவர்களுக்கு இடையுறு விளைவிக்காமல் இருந்தால் சரி.பொது இடங்களில் உங்களது காமலீலைகளை அரங்கேற்றதீர்கள்.


நாளைய சமுதாயம் உங்களை உற்று நோக்குகின்றது என்பதை மட்டும் உணர்ந்து செயற்படுங்கள்.
காதல் புனிதமானது அதை மற்றவர்கள் கொச்சைப்படுத்திவிடாது பாருங்கள்.

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...