Sunday, April 12, 2009

சிந்திக்க வேண்டிய சித்திரை


தமிழர்களின் புதுவருடப் பிறப்பு நாளை உலகத் தமிழர்களின் தமிழ் முதலாம் நாள் இற்றைக்கு 2 வருடங்களுக்கு முன்பு சித்திரை வருடப்பிறப்பு என்றால் எத்தனை சந்தோஷம் ஈழத்தமிழனுக்கு.


ஆனால் இன்று ஈழத்தமிழன் சொல்லொண துயரத்தில் இருக்கின்றான் அவனது இருப்புக் கூட கேள்விக் குறியாகியுள்ள நிலையில் நாளை மலரப்போகும் விரோதி வருடம் ஈழத்தமிழனுக்கு என்ன செய்யப்போகின்றதோ தெரியவில்லை.


இன்னொரு சோமாலியா போல் முல்லைத்தீவில் பஞ்சம் பட்டிணி மக்களை வாட்டுகின்றது உணவுப்பொருட்களின் விலையோ ஆயிரக்கணக்கில் இருக்கின்றது.சிங்களப் பேரினவாதம் விடுதலைப் புலிகளையும் தமிழனையும் அழித்து விட்டுத்தான் தனது சிஙக்ள புதுவருடத்தைக் கொண்டாட திட்டமிட்டிருக்கின்றது.


தமிழனைக் கொன்று குவித்து அவனது இரத்தத்தில் சுகம் காணத் துடிக்கின்றது. விடுதலைப் போராட்டம் முடக்கப்பட்டு விட்டதாக நினைக்கின்றது சிங்களப் பேரினவாதம்.


ஆனால் அது இன்னும் விரிவடைந்து வந்து ஒரு ஏழுச்சி நிலையில் நிற்கின்றது. ஆயுதப் போராட்ட ரீதியில் புலிகள் தோல்வியை அடைந்திருப்பது உண்மைதான்.


ஆனால் அவர்களை உலகம் அங்கீரிக்கின்ற ஒரு நிலையை இன்று புலம்பெயர் தமிழர்கள் செய்துவருகின்ற ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதங்களும் உணர்த்துகின்றன.


வீட்டின் ஒரு கோடியில் இருந்த தமிழீழத் தேசியக் கொடி இன்று உலகத்தின் அத்தனை கோடிக்கரைகளையும் தொட்டு நின்று பறக்கின்றது.


ஒரு புறம் உலகப் பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் ஈழத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலை தமிழனின் வாழ்க்கைக்கு எப்போது நிம்மதி கிடைக்கப்போகின்றதோ வாழப் பிறந்தவனா இல்லை சாகப் பிறந்தவனா தமிழனா என்று எண்ணத் தோன்றுகின்றது.தமிழர்கள் ஒன்று பட்டால் இந்த சித்திரையில்லை எத்தனை சித்திரைகள் வந்தாலும் தமிழனை அழிக்க முடியாது.

Friday, April 10, 2009

லண்டன் உண்ணாவிரதம் உணர்த்துவது என்ன?


லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உண்ணாவிரதப் போராட்டம் உலக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.
காந்தி தேசம் கைவிட்ட பின்னர் இன்று உலகத் தமிழர்கள் ஐ.நா.வையே நம்பியிருக்கின்றார்கள்.
தமிழர்கள் இன்று 300 பேரை இலங்கை இராணுவத்தினர் கொன்று குவித்திருக்கின்றனர்.
தடுக்குமா உலகம்? இல்லை தட்டிக்கழிக்குமா? காந்தி வழி என்று சொல்வதை விட திலீபன் வழி என்றால் ஈழத்தமிழனுக்கு நல்லது.
உண்ணாவிரதங்கள் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும் இன்று புலம்பெயர் தமிழர்களின் இந்த உண்ணாவிரதம் உலக நாடுகளை கொஞ்சம் அசைக்கும் என்றுதான் தெரிகின்றது.
கடும் குளிரிலும் இந்த உண்ணாவிரதிகளின் கண்களில் சிந்துவது இரத்தக்கண்ணீர் ஈழத்தமிழனுக்காக.... அந்தக் கண்களில்.... என்ன தெரிகின்றது
உலகமே...... கைகொடு ஈழத்தமிழனைக் காப்பாற்ற.











Tuesday, April 7, 2009

லண்டனில் தமிழர்கள் போராட்டம்











லண்டனில் தமிழர்கள் போராட்டம்

ஈழத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை அரசால் கொன்று குவிக்கப்படுகின்றனர்.
அவர்களை சர்வதேச சமூகம் காப்பாற்றமல் வேடிக்கை பார்க்கின்றது.
நேற்றும் இன்றும் லண்டன் பாராளுமன்றத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் வீதி மறியல்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதையும் அங்கு பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையும் படங்களில்...













Wednesday, April 1, 2009

ரம்பாவின் பிரச்சாரம் ஆரம்பம்



தேர்தல் பிரச்சார மேடையில் ரம்பா தயாராகிக் கொண்டிருக்கின்றார். மானாட மயிலாடா நிகழ்ச்சியில் நடுவரே அவருக்கு இன்று வாழ்க்கை கொடுத்துக் கொண்டிருக்கின்றது அதற்கு ஒரு நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா அதற்காகவே அதிரடியாக sorry கவர்ச்சியாக களத்தில் இறங்கிவிடடார் ரம்பா .
அது சரி ரம்பா மேட்டருக்கு வாங்களன்...
ரம்பா தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகின்றார்....
தொண்டர்கள் அலை மோதிக்கொண்டிருக்கின்றனர்.
ரம்பா மேடையில் அமர்க்கின்றார்... ரசிகர்களின் கரகோஷம் வானைப் பிளக்கின்றது.
வருங்கால முதலமைச்சர் ரம்பா வாழ்க ரம்பா வாழ்க என்று கலைஞரோ பயந்து விட்டார் எனக்கு பிரச்சாரத்திற்கு அழைத்தால் அவளே வருங்காள முதல்வராம் எப்படி முட்டாள் தனமான தொண்டர்கள் என்று மனதுக்கு வேதனையோடு.
கலைஞர் ரம்பா கலைஞரின் தளபதி மு.கா.ஸ்டாலின் அழகிரி மற்றும் கனிமொழி ஆகியோர் குடும்ப குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர்.
பிரச்சாரத்தை கலைஞர் ஆரம்பித்து வைத்தார் எனது கட்சி இன்று பெரும் பின்னடை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
எல்லாப் பக்கதினாலும் அடி அடி அடி அடிக்கின்றார்கள்.நானும் எவ்வளவுதான் வலிக்காத மாதிரி நடிக்கிறது. அதற்காகவே தொடை அழகி ரம்பா வை வைத்து பிரச்சாரம் செய்வது என்று எமது குடும்பக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.
ரம்பா அம்மாவைப் பற்றி நான் சிறிது சொல்லியாக வேண்டும்.தமிழகத்திற்கு இரண்டு அம்மாக்கள் ஒன்று ஜெயா அம்மா மற்றது ரம்பா அம்மா.ஜெயா அம்மாவின் முதல்வர் கனவு நிறைவேறாது.
எனவே என் இரத்தத்தின் இரத்தங்களே என் சொந்தங்ளே என் உயிரிலும் மேலான தமிழ் மக்களே அடுத்து ரம்பா அம்மா உங்கள் முன்னிலையில் உரையாற்றுவார்...
(தொண்டர்கள் வெடிகொழுத்தி சந்தோஷப்படுகின்றார்கள்)
அழகிய லைலா ரம்பா வாழ்கதொடை அழகி ரம்பா வாழ்க என்று கோஷங்கள் எழுப்பியவாறு இருந்தனர்.
ரம்பா பேசுவதற்காக மைக்கைப்பிடிப்பதற்கு முன்…
மானாடா மயிலாடா மானாடா மயிலாடா டைட்டில் சோங் போடப்படுகின்றது ரம்பா ஆடிய வண்ணமாக வந்து மைக்கைப்பிடிக்கின்றார்.
ஹாய் ஹாய் ஹாய் நான் டமிழக முதல்வரை ஆத்தரித்து பேச்ச வந்திருங்கின்றன்.நான் இங்கே வந்து பேசுவதற்கு எனக்கு ஆதரவு தெரிவித்த தொண்டர்களுக்கு வனக்கம்.
கலைஞர் காட்வேர்க் செய்ஞ்சு இந்த இடத்துக்கு வந்திருக்கா அவர் டமிழ் மக்களுக்கு செய்யும் உதவி மிகப்பெரிது தானே ரி.வி தொடங்குவார்
தானே ரி.வி இலவசமாக கொடுப்பார்
தானே அரிசியை இலவசமாகக் கொடுப்பார் தானே ஆந்திரவிற்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பார்.அப்படி பட்ட டமிழக முதல்வர் கலைஞருக்கு உங்க ஓட்டை போடுங்க?
கலைஞரின் performance நல்லாயிருக்கு.. வரவர
அவரது டலன்ட் தெரிய வருகின்றது.
இடையில் சஞ்சய் வந்தார் என்னடா என்று பார்தால் பிரேக் சொல்ல வந்துவிட்டாரா என்று நினைத்தேன் இல்லை அவர் வந்து சொன்னது
நீங்கள் கலைஞருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்றால் கலைஞர் என்று டைப் பண்ணி கலைஞர் போனுக்கு எஸ்.எம்.எஸ் பண்ணுங்கள் அதில் அதிஷ்ட சாலிக்கு கலைஞர் தங்க மோதிரம் வழங்குவார் என்று அறிவித்து விட்டு சென்றார்.
தேர்தல் களத்தின் முதலாவது பிரச்சாரம் முடிந்து விட்டது.
மீண்டு ஒரு பிரச்சாரத்தில் சந்திக்கும்வரை உங்களிடம் இருந்து விடைபெறுவது கலைஞர் தொலைக்காட்சியின் வால்கள்.

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...