Saturday, March 14, 2009

பூஷ் மீது ஷூ வீச்சும் முல்லைத்தீவில் குண்டு வீச்சும்


என்னடா குண்டக மண்டக்க என்று தலைப்பு வைத்திருக்கின்றான் என்று நீங்கள் நினைக்க வேண்டாம் எல்லாம் ஒரு காரணத்தோடுதான்.அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜோர் ஜ் டபிள்யூ மீது ஊடகவியளார் ஒருவர் தனது ஷூ வினைத் தூக்கி புஷ்ஷின் மீது வீசினார்.

இது பழைய கதை இப்பொழுது அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு 3 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு விட்டது.
ஒரு ஷூ வினால் எறிந்தவருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை என்றால் முல்லைத்தீவில் தினமும் அரைச் சதத்திற்கும் அதிகமாக மக்களை குண்டு வீசிக்கொள்ளும் சரத் பொன்சேகாவுக்கும் கோத்தபாயவுக்கும் என்ன தண்டனை?

அமெரிக்காவே உனது நாட்டின் தலைவனுக்கு ஒருவன் ஷூ வினால் எறிந்ததுக்கே உடனே தண்டனை கொடுக்கும் நீ.

உனது நாட்டு பிராஜாவுரிமை பெற்று இருக்கும் சரத் பொன்சேகாவுக்கும் கோத்தபாயவுக்கும் என்ன கொடுக்கப்போகின்றாய்?

இவர் பெரிய சட்டத்தரணி கதைக்க வந்திட்டார் எங்களுடன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

ஒரு நாளுக்கு 50, 70 என்று தமிழ் உயிர்கள் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அது உலகத்தின் கண்ணுக்குத் தெரியவில்லையோ?

அமெரிக்கனின் மீது தூசு விழுந்தால் கூட தட்டிக்கேட்கும் உலகம்.
ஈழத்தில் தமிழனின் உயிர்கள் பறிக்கப்படுவதை தட்டிக்கேட்டால் என்ன குறைந்தா போய்விடுவார்கள்.

Wednesday, March 11, 2009

பாலாவின் பட்டறை

தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வந்தவர் பாலுமகேந்திரா. அவரின் வாரிசாக வந்த பாலா குருவை விட பல மடங்கு மாற்று சினிமாவை உருவாக்கி வருகின்றார்.


தமிழ் சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏன் ஒரு புரட்சி என்று கூட சொல்லலாம். வழமையான மசாலா படங்களை உடைத்து இன்று வெற்றி நடைபோடுகின்றது நான் கடவுள்....


பாலா எனும் சிற்பி செதுக்கிய சிற்பங்களைப்பற்றித்தான் எனது பதிவை இடலாம் என்று நினைத்தேன்.
பாலாவின் கைபட முன் இருந்த கல்லுக்குள் இருந்த நிலையும் பின் பாலாவின் கைபட்டபின் அந்தச் சிற்பங்களின் வெற்றியுமே இன்று தமிழ் சினிமாவை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது.


விக்ரம்
சேதுவுக்கு முன்னிருந்த விக்ரம் யாருமே அறிந்திருந் விக்ரம் டப்பிங் கலைஞராகவும் ஹீரோ வுக்கு நண்பனாகவும் நடித்து வந்தார் விக்ரம் பி.சி.ஸ்ரீராமின் இயக்கத்தில் வெளிவந்தது மீராவில் கதாநாயகனாகவும் அஜித்தின் உல்லாசம் படத்தில் அஜித்தின் அண்ணனாகவும் நடித்தார் ஆனால் வெற்றி நயகனாக அவரால் சோபிக்க முடியவில்லை.

விக்ரம் எனும் வைரம் மறைந்ததிருந்தது யாருக்குமே தெரியாது அது பாலா எனும் சிற்பியினால்தான் பட்டை தீட்டப்பட்டார். சேது இன்றும் விக்ரமின் சியான் அடையாளம் தமிழ் சினிமாவை மாற்றி யமைத்த படம்.
பாலாவின் பாடங்கள் என்றால் சோதனைகளைக் கடந்துதான் சாதனை செய்கின்றது.

விக்ரம் சேது படம் திரைக்கு வந்து வெற்றி நடைபோட்ட பின்புதான் அனைவருக்கும் விக்ரம் என்ற நடிகன் வெளியுலகத்திற்குத் தெரிந்தது. அதன்பின் விக்ரம் நடித்த படங்கள் தில் தூள் காசி படங்கள் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றன. மீண்டும் பாலவின் படம் பிதா மகன் வெட்டியானாக வாழ்ந்தார் விக்ரம் தேசிய விருது கிடைத்தது.


பாலாவின் பாசறை என்பது ஒரு நடிகனுக்கு தேடல்களை ஏற்படுத்துகின்றது என்றுதான் சொல்லலாம் பாலாவின் படத்தில் நடித்த பிறகு அந்த நடிகன் நல்ல கதாபாத்திரங்களை தேடுகின்றார்கள். அப்படி விக்ரம் தேடி நடிப்பதால் தான் அந்நியன்- கந்தசாமி என்று தனது படைப்புக்களை தரமுடிகின்றது.


சூர்யா
பாலாவின் கைபட்ட மற்றும் ஒரு நட்சத்திரம் ஏன் சூரியன் என்று கூடச் சொல்லலாம்.நந்தாவுக்கு முன் நந்தாவுக்கு பின் என்று சூர்யாவின் திரை வாழ்க்கையை நாம் பிரித்து பார்க்கலாம்.

நேருக்கு நேர் படத்தில் மூலம் வசந்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சூர்யா விஜயுடன் சேர்ந்து நடித்தார்.

சிவகுமாரின் மகன் என்ற பெயருடன் திரைக்கு அறிமுகம்.... தனி ஹீரோ டபிள் ஹீரோ படங்களில் நடிக்க ஆரம்பித்தார் முரளியுடன் காதலே நிம்மதி, விஜயகாந்துடன் பெரியண்ணா விஜயுடன் மீண்டும் ப்ரண்ட்ஸ் என்று நடித்தார் படங்களில் அவரது நடிப்பு பேசும் படியாக அமையவில்லை.


அப்பொழுதுதான் பாலாவின் நந்தாவில் நடித்தார் சூர்யா நந்தா... சூர்யாவை பெரிய ஹீரோ ரேஞ்சுக்கு கொண்டுபோய் நிறுத்தியது.

அதன் பின் வந்த ஸ்ரீ தோல்வியைக் கொடுத்தாலும் துவண்டுவிடாமல் பாலாவின் சிஷ்யன் அமீரின் முதல் படம் மௌனம் பேசியதே சூர்யாவுக்கு ஓரளவுக்கு வெற்றியைக் கொடுத்தது.


பாலாவுடன் சேர்ந்து மீண்டும் ஒரு சவால் என்றுதான் சொல்லலாம் பிதாமகன் விக்ரமுடன்அதன் பின் சூர்யா தேடல்களில் இறங்கினார்.. மாறுபட்ட கதாபாத்திரங்களையே தேர்வு செய்தார்.

பேரழகன், காக்க காக்க, வேல், ஆறு, வாராணம் ஆயிரம் என்று தான் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களை வேறு வடிவங்கள் கொடுக்கின்றார் என்றால் அது பாலாவின் பட்டறையில் இருந்தவடியால்தான்.



ஆர்யா
பாலாவின் பட்டறையில் எதிர்பாராமல் நுழைந்த நடிகர் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.

அஜித்துடன் மோதல் அதன் பின்பு பாலா கண்டுபிடித்த நடிகர் ஆர்யா சினிமா பின்புலமே இல்லாமல் வந்த நடிகர் இயக்குநர் ஜீவாவினால் கண்டுபிடிக்கப்பட்டு இயக்குநர் விஷ்ணுவர்த்தனால் வளர்க்கப்பட்டு பாலாவினால் பட்டை தீட்டப்பட்டார்.


நான் கடவுள் ஆர்யாவுக்கு நடிப்பு என்ன என்பதை கற்றுக்கொடுத்துவிட்டது.அடுத்து சர்வம்மெட்ராஸ் பட்டணம் என்று வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட நடிப்பை வெளிப்படுத்தப் போகின்றார் ....... சரி பார்ப்பம் பாலாவின் பட்டறையில் அடுத்ததாக எந்த நடிகருக்கு அதிஷ்டம் என்று பார்ப்பம்.

நல்ல சினிமாவையும் நல்ல நடிகர் களையும் உருவாக்கும் வல்லமை தமிழ் சினிமாவில் பாலாவும் அவரது சிஷ்யப்பிள்ளைகளும் செய்துவருவது பெருமைக்குரிய விடயம்.

Monday, March 9, 2009

ஜெயாவின் கபட நாடகம்


கருணாநிதியின் படம் 100 ஆவது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும்போது ஜெயலலிதா புதிய திரைப்படத்தைஇன்று திரைக்கு கொண்டுவந்திருக்கின்றார்.

கதை திரைக்கதை இயக்கம் எல்லாம் ஜெயாதான்

இசை: தா.பாண்டியன்

ஒளிப்பதிவு: ஜெயா .ரிவி.

ஒலிப்பதிவு: வைகோ

பாடல்கள்: சசிகலா ஆகிய சினிமாவின் சாரி

அரசியல் ஜம்பவான்கள் இணைந்து வழங்கும் “ஈழத்தமிழரும் உண்ணாவிரதமும் என்ற படத்தை இன்று மட்டும் தமிழகமேங்கும் திரையிடப்படுகின்றது.

தேர்தல் வருது என்றவுடன் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யத் துணிந்தவர் ஜெயலலிதா என்று தெரிகின்றது.

ஈழத் தமிழர்களின் உயிர்கள் சிங்களப் பேரினவாதத்தினால் இன்று அழிக்கப்பட்டு தமிழனிடம் உள்ள ஒரு சொற்ப நிலத்தையும் சிங்கள இராணுவம் பிடிப்பதற்காக தமிழ் உயிர்களைக் கொலை செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ஈழத் தமிழர்களுக்காக முழுத் தமிழகமே இன்று திரண்டு நிற்கின்றது.

இவ்வேளையில் தான் மட்டும் தனித்து நின்றால் மக்கள் தன்னை நிராகரித்து விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு தானும் ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டதுபோல் நடிக்கின்றார் இந்த ஜெயலலிதா.

என்ன கொடுமை சார்... ஈழத் தமிழரின் நலனில் உண்மையான அக்றை கொண்டுள்ளவர் என்றால் இன்று ஏன் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு தேவை என்று கூக்குரல் ஈடுகின்றார்.கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்று சொல்வதற்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் என்ற பெயரில் கருணாநிதியினை சாடுவதே ஜெயலலிதாவின் பிழைப்பாகப்போய்விட்டது.கருணாநிதி என்ன செய்தார் என்று சொல்வதை முதலில் ஜெயலலிதா நிறுத்த வேண்டும்.நான் என்ன ஈழத் தமிழர்களுக்கு செய்தேன் செய்யப்போகின்றேன் என்று சொல்லட்டும் பார்ப்பம். அதைவிடுத்து கருணாநிதி அது செய்தார் இது செய்தார் என்று சொல்லி தனது அரசியலை நடத்துவதை முதலில் நிறுத்த வேண்டும் ஜெயா.ஈழதமிழனுக்காக முதலைக் கண்ணீர் வடிக்காமல் அவர்களுக்காக போராடுவதே மேல் உண்ணாவிரதம் அதை தொடக்கி வைத்தவர்கள் மாணவர்கள் அந்த மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புப் கொடுக்காமல் அவர்களுக்கு எதிராக செயற்பட்டவர் இந்த ஜெயலலிதா.

இது உண்ணா விரதமா இதைபார்க்க தமிழகமே உனக்கு மானம் ரோசம் சூடு சுறணை இல்லையா?

Sunday, March 8, 2009

வரலாறாக வாழ்கின்ற பெண்களுக்கு ஒரு சலூட்.



என்னை வாழவைத்துக்கொண்டிருப்பதும் எனது வாழ்க்கைக்கு உறுதுணையாக நிற்பவர்கள் பெண்கள்… அந்தப் பெண்களுக்காக ஒரு தினம் இன்று அந்த தினத்தைப் பற்றியும் பெண்கள் பற்றியும் எழுதவேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன் ஆனால் சற்று பிந்தித்தான் எனது பதிவை இடவேண்டிய சூழ்நிலை.. என்ன பிந்தி வந்தாலும்.. என் மனம் கவர்ந்த பெண்களைப் பற்றி நான் பதியாமல் போனால் நான் வாழ்ந்துதான் என்ன?
ஒரு ஆணின் வெற்றிக்குப்பின்னால் ஒரு பெண் இருப்பால் என்பது உண்மை அது தாயாக தாரமாக நண்பியாக எத்தனை பரிமாணங்களில் தோற்றம் கொடுக்கின்றனர்.
பெண்கள் இன்று ஆணுக்கு சரிநிகராக வளர்ந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல தோன்றுகின்றது. இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் நிமிர்ந்து நிற்கின்றார்கள் என்றால் அது அவர்களுக்குக் கிடைத்த தன்னம்பிக்கையென்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
பத்துமாதம் ஒரு குழந்தையைச் சுமந்து பின் அதை சீராட்டி பாலூட்டி வளர்த்து எடுக்கின்றபொறுப்பு இருக்கின்றதே அதை விட இனிமையான ஒரு சுமை இருக்க முடியாது.கணவனுக்கு அடுத்தப் படியாக தனது குழந்தையை கண்ணும் கருத்துமாக காக்கின்றாள் ஒரு தாய் அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன் என்றுதான் சொல்லவேண்டும் இத்தனை வருடங்களாக என்னை சுமந்தது மட்டுமல்லமல் இன்று வரையும் அன்பில் ஒரு குறைகூட விடாமல் பார்த்துக்கொள்ளும் தாய்கு நான் என்ன பரிகாரம் செய்யப்போகின்றேனோ தெரியவில்லை....
மனைவி.... அதைப்பற்றி அறிய எனக்கு இன்னும் வயது வராதபடியினால்..
தோழிகள்
நான் இன்று துணிந்து ஒரு வார்த்தை வாயினால் ஏன் இந்த பதிவினைக்கூட இடுவதற்கு காரணம் எனது தோழிகள் தான் என்று சொல்லலாம் நான் விடும் தவறுகளையும் சுட்டிக்காட்டுவதிலும் என்னை நான் திருத்திக் கொள்வதில்லும் பெரிய பங்கு எனது தோழிகள் இந்த தோழிகள் இல்லையேல் நான் இன்று எங்கே? எப்படி? ஏன் உயிரோடு கூட இருந்திருப்பேனா தெரியவில்லை.
நான் அவர்களிடம் பெற்ற அன்பு என் வாழ் நாள் முழுவதும்.. ஏன் அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் கூட நான் மறக்க முடியாது நான் துவண்டு போயிருக்கும் வேளைகளில் எனக்கு ஏணியாக இருந்தவர்கள் எனது தோழிகள்தான்.இந்த பெண்கள் தினத்தில் அவர்களுக்கு நான் தலைவணங்குகின்றேன்.
(அது சரி சுய புராணம் பாடமல் எதாவது எழுத முடியாத என்று நிங்கள் நினைக்கின்றது எனக்கு தெரியும் இன்று பெண்கள் தினம் அதுவும் தமிழன் கண்டு பிடித்தான இல்லை அமெரிக்கன் கண்டு பிடித்த இந்தப் பெண்கள் தினத்தை இன்று மீடியாக்கள் தங்கள் வியாபாரத்திற்காக பயன்படுத்துகின்றார்கள்.
பெண்களில் சாதித்தவர்களின் பேட்டிகள் என்ற போர்வையில் நடிகைகளை பேட்டிகாண்பது என்ன நியாயம்?ஒவ்வொரு தாயும் தனது பிள்ளையை பெற்று வளர்ப்பதும் சாதனைதான். பூமா தேவிக்கு பொறுமையிருக்கு என்று சொல்கின்றார்கள் அதை நான் பார்த்ததில்லை ஆனால் பெண்களிடம் பொறுமையும் விவேகமும் இருக்கின்றது.

வரலாற்றில் வாழ்ந்த பெண்ளுக்கும் இன்றும் வரலாறாக வாழ்கின்ற பெண்களுக்கும் ஒரு சலூட்.

Monday, March 2, 2009

பேனா முனைகளை துப்பாக்கி முனையாக்காதீர்


தமிழர்கள் மீதான அடுக்குமுறைகள் தமிழர்கள் மீதான கொடுமைகள் தமிழர்கள் மீதான வன்முறைகள் என்று சிங்களப் பேரினவாத அரசாங்கம் செய்துவரும் நிலையில் இன்று தென்னிலங்கையில் தமிழ் ஊடகங்கள் மீதும் தமது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது.
சுடர் ஒளி - தினக்குரல் - வீரகேசரி ஆகிய பத்திரிகைகள் மீதும் பத்திரிகை நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்துவது ஊடகவியலாளர்களை கடத்திக் கொலை செய்வது என்று தனது பாரிய பங்களிப்பை இந்த அரசாங்கம் செய்து வருகின்றது.
சிவராம்-நடேசன்-நிமலராஜன் என்று தொடங்கிய கொலைகள் இன்று லசந்த வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
திஸ்ஸ நாயகம்.. தொடங்கி இன்று வித்தியாதரன் ( வித்தி) வரை துணிந்து தமிழ் மக்களின் குரலாகத் திகழ்பவர்களை பொலிஸ் விசாரணை என்ற பெயரில் கைது செய்து அடைத்து வைத்திருக்கின்றது மஹிந்த அரசு.உரிமைக்குரல் இனத்தில் வெளிப்பாடு இந்த இனத்தின் ஊடககங்களே அந்த ஊடகங்களில் துணிந்து செயற்படுபவர்கள் இன்று ஒரு சிலரே..
வித்தியாதாரன் கைது இன்று தமிழ் உலகுக்கும் ஒரு வேதனையான செய்தி மட்டும் மல்ல சோதனையும் கூட அரச கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அரசு செய்யும் தவறுகளை தன் நெற்றிக் கண் கொண்டு செய்திகளை வெளியிடுபவர்... தமிழினம் இன்று நல்ல ஊடகவியலாளர்களை இழந்து வருகின்றது.யாரும்... ஊடகவியலாளன் ஆகலாம்… ஆனால் ஒரு சிலரே அதை தொழில் என்று நினைக்காமல் தமது கடமைகடப்பாடுகட்டாயம் என்று தங்களை ஊடகங்களுக்காக அர்ப்பணிக்கின்றார்கள். அவ்வாறு அற்பணிப்பவர்கள் மீது அரச பயங்கரவாதத்தை ஏவிவிடுகின்றது.இன்று ஒரு வித்தி நாளை எத்தனை வித்தியோ... தெரியவில்லை... தமிழ் மக்களின் உரிமைகள் குரல்கள் நசுக்கப்படுகின்றன.அண்மையில் கொழும்பில் உள்ள தமிழ் ஊடகங்களின் தலைவர்களை மஹிந்த அரசு சந்தித்ததாகவும் முல்லைத்தீவில் நடைபெறும் பேரில் இறக்கின்ற காயப்படுகின்ற தமிழ் மக்களின் படங்களை பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டாம் என்றும் அந்த படங்கள் விடுதலைப் புலிகளினால் கிராபிக்ஸ் செய்து அனுபப்படுகின்ற என்றும் ஊடகங்களை அவ்வாறான படங்களை பிரசுரிக்க வேண்டாமாம்?ஓகே... அவர்கள் சொல்கின்றது சரியென்றால் வவுனியா வைத்தியசாலைக்கும் திருகோணமலை வைத்தியசாலைக்கு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கும் முல்லைத்தீவில் இருந்து வருபவர்கள் என்ன சுற்றுலாவா வருகின்றார்களா?மக்கள் படும் வேதனைகள் மக்களுக்குத் தெரிவிப்பது ஊடகங்களின் கடமை அவற்றை விடுத்து தமிழ் ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகளையும் அடக்குமுறைகளையும் விதிக்குமானால்.. பேனா முனை பிடிக்கும் ஊடகவியாளர்களை துப்பாக்கி முனை பிடிக்க வைக்காதீர்கள்

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...