Wednesday, February 18, 2009

அவலக் குரலை கேட்டகாத உலகம்

முல்லைத்தீவு மரண ஓலங்கள் கேட்டவண்ணம்மாகவே இருக்கின்றது. ஏன் சுடுகாடாகவே மாறிக்கொண்டிருக்கின்றது. ஒன்று இரண்டு என்று எண்ணிக்கையில் இறந்த எம் மக்கள் இன்று நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.அத்தனையும் இன்று உலகம் அறியாதது அல்ல... உலகமே ஏன் நீ மௌனீயாக இருக்கின்றாய்.. சிங்களப் பேரினவாதத்துக்கு உனது ஆதரவை நீ மறைமுகமாகச் செய்துகொண்டிருக்கின்றாயே..
சர்வதேசத்தில் இன்று முத்துக்குமார் மூட்டிய தீ... எவ்வளவு எழுச்சிப் பெற்று எத்தனை தீக்குளிப்புகள் எத்தனை கண்டனப் பேரணிகளை எமது தொப்புல்கொடி உறவுகள் நடத்தியும் உனக்கு தெரியாதா? இல்லையேல் தெரிந்தும் தெரியாததுபோல் நடிக்கின்றாயா? பச்சிளம் குழந்தைகள் ஒன்றும் அறியாப் பாலகர்கள் உலகமே அறியாத குழந்தைகள் அத்தனையும் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் அழிக்கப்படுகின்றது.
தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள் இராணுவத்தினால். அதையும் சர்வதேசம் கண்டு கொள்ளாமல் இருப்பது. அவர்கள் வெட்கித் தலைகுனியவேண்டும்.
இந்தியா அரசியல் வாதிகள் என்ன சோறா திண்ணுகின்றார்கள் என்று தெரியவில்லை.சீமானை பிடிக்க பொலிஸ் தேடி தேடி திரியுது... முதலில் எமக்காக குரல் கொடுப்பவர்களின் குரவல் வளையை நசிக்க நினைக்கின்றது இந்திய மத்திய அரசு.ஒரு சீமானை நீ துரத்த்தி பிடிக்க முயற்சித்தால் ஆயிரம் ஆயிரம் சீமான்கள் தோற்றுவிக்கப்படுவார்கள்.அது கூட தெரியாதா?ஒருத்தன் எப்பொழுதும் அடிமைப்படுத்திக்கொண்டிருக் கும்போதுதான் அங்கு புரட்சி தோற்றுவிக்கப்படுகின்றது.குட்டக் குட்டக் குனிபவன் தமிழன் என்று நினைக்காதே நீ நினைக்காத நேரம் நினைக்காத காலம் தமிழினம் வீறுகொண்டு எழும் அப்பொழுது இந்தியாவின் இறையாண்மை ஏங்கே போகப்போகின்றது என்று தெரியாது.குடும் அரசியலும் குடும்ப நலனுமே கனவாகக் கொண்ட கருணாநிதி என்று செய்கின்றாரோ தெரியவில்லை. ஈழப்பிரச்சினையில் ஆரம்பத்தில் இருந்து நான் தான் பேசி வருகின்றேன். நான் அது செய்தேன் இது செய்தேன் என்று சொல்வதை விடுத்து இப்பொழுது என்னசெய்ய வேண்டும் என்று நினைத்தால் நல்லது.மொத்த தமிழினமும் மாண்ட பின் குரல் கொடுத்து என்ன பிரயோசனம். வீறுகொண்டு எழுடா தமிழா உனக்கான ஒரு நாடு விரைவில்....

Monday, February 16, 2009

ஐ லவ் யூ

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக இதுவரையாரும் பார்க்காத கோணத்தில் புதுவிதமாக காதலை சொல்லப்போகின்றோம் என்று... ஒவ்வொரு இயக்குநரும் தடம் பதிக்க ஆசைப்படுகின்றார்கள் அவர்களுக்காக இதோ.... காதலர் தினம் அன்று உலகில் வானம், பூமி, நீர் என்று.. தங்களது காதலை பரிமாறிக்கொண் டவர்களை நீங்கள்.. பார்க்கலாம்... ஏன் மனிதர்கள் மட்டுமா நாங்கள் இல்லையா என்று இந்தக் கிளிகளும் கேட்கின்றன.இனியாவது தமிழ் சினிமாவில் இப்படியான காதல் வருகிறன்றதா என்று பார்ப்போம்.












Wednesday, February 11, 2009

ஈழத்து இளம் குயிலும் ஒஸ்காரில்...

என்னடா எதோ பறவை ஒன்று ஒஸ்கார் போட்டிக்கு போகுது என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.எங்கட நாட்டு பாடகர்கள் ஒஸ்கருக்காக போட்டியிடுகின்றாரா என்று வாய் பிழக்க வேண்டாம்.எம்மவர்களின் திறமைகள் இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் மூலம் உலகம் அறிந்துகொண்டிருக்கும் வேளையில்..புலம் பெயர்ந்து லண்டனில் வாழ்கின்ற ஈழத்து இளம் குயில் அருள்பிரகாசம் மாதங்கி பற்றித்தான் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டும்.ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த ஸ்லம்டோக் மில்லியனர் படத்தில் வரும் ஓ சாய பாடலை பாடியது இந்த மாயா என்ற மதங்கிதான்.மதங்கி என்றவுடன் நீங்கள் நினைக்க வேண்டாம் தென்னிந்திய பின்னணிப் பாடகி மாதங்கி என்று...இவர் 1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி ஈழத்தில் பிறந்த இவர் தனது 11 ஆவது வயதில் லண்டனுக்கு அகதியாக சென்றார்.அங்குள்ள சென் மார்ஷல் ஆட்ஸ் அகடமியில் தனது கலை பட்டப்படிப்பை முடித்தார்.பட்டபடிப்பு முடிந்ததும் இவர் தனி இசைப் பாடல்களை இயற்றுவதிலும் தானாக அல்பங்களை வெளியிடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கடந்த ஜனவரி மாதம் வாஷிங்டனில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியொன்றில் மேலைத்தேய பாணியில் பல பாடல்களை பாடிய மாயா இறுதியில் ஈழத்தமிழ் மக்கள் படும் அவலங்களையும்துன்பங்களையும் ரணங்களையும் வெளிப்படுத்தும் விதமாக கண்ணீர் துளிகள் சிந்தி பாடலை பாடினார்.அவரது இந்த பாடல் உலகத்தையே கண் கலங்கச் செய்தது. இதற்கமைய அவர் பாடலை பாடி முடிக்க இசை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் போரை நிறுத்து மக்களை கொல்லாதே என கோஷம் எழுப்பியுள்ளனர்.மாதங்கியின் பாடல்களின் பெரும்பாலானவை ஈழத்தின் விடுதலைப் போராட்டத்தை பற்றியவையாகவே உள்ளது.2005 ஆம் ஆண்டு அல்பம் ஒப் த இயர் விருதை பெற்றார். கடந்த வாரம் இடம்பெற்ற கிரம்மி விருதுக்கும் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.எனினும் விருது கிடைக்கவில்லை. எனினும் தனது முதல் குழந்தையை வயிற்றில் சுமந்துக்கொண்டு கிரம்மி விருது வழங்கல் நிகழ்வில் பாடல் பாடி அசத்தியுள்ளார் இந்த மாதங்கி.மாதங்கியின் புகழ் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கவில் மிகவும் புகழ் பெற்றதாக இருக்கின்றது . இதனால்தான் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையில் எமது ஈழத்து இளம் குயிலையும் பாட வைத்திருக்கின்றார் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடுவதே எம்மவர்களின் கனவாக இருக்கும் போது ரஹ்மானே தனது இசையில் முதல் தடவையாக ஈழத்து இளம் குயிலைச் சேர்த்துக் கொண்டதும் அப்பாடல் ஒஸ்கார் போட்டியில் கலந்து கொண்டுள்ளதும் நம்மலுக்குத்தானே பெருமை.... விருதை பெற மாயாவுக்கு வாழ்த்துக்கள்

Monday, February 9, 2009

ஏ.ஆர் ரஹ்மான் (BAFTA)

பிரிட்டனின் மிக உயர்ந்த திரைப்பட விருதான பாஃப்டா (BAFTA) விருதையும் வென்றார் தமிழகத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்.
விருது மேல் விருது குவித்துவரும் டேனி பாய்லின் ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் சிறந்த இசைக்காக இந்த விருது ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
9 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 'ஸ்லம்டாக்...' இந்தியக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பிரிட்டிஷ் படம் என்பதால் நிச்சயம் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தம் 11 பிரிவுகளில் இந்தப் படத்தை பரிந்துரைத்திருந்தார்கள்.
அவற்றில் சிறந்த இசை உள்பட 7 பிரிவுகளில் பாஃப்டா விருது கிடைத்துள்ளது.
அவற்றில் சிறந்த இயக்குநர் (டேனி பாய்லே), சிறந்த இசை (ஏஆர் ரஹ்மான்), சிறந்த திரைக்கதை (சைமன் பியூஃபோய்), சிறந்த ஒளிப்பதிவு (ஆண்டனி டாட் மாண்டில்), சிறந்த சவுண்ட் எடிட்டிங் (ரசூல் பூக்குட்டி, க்ளென் ப்ரீமாண்டில், ரிச்சர்டு ப்ரைக், டாம் சாயர்ஸ் மற்றும் இயான் டாப்) ஆகிய பிரிவுகளில் விருது கிடைத்தது. இவர்களில் ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் மட்டுமே இந்தியர்கள்.
நேற்று லண்டனில் நடந்த வண்ணமிகு விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
பாஃப்டா விருதை வெல்லும் முதல் இந்தியர் ஏஆர் ரஹ்மான்தான். ஏற்கெனவே கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இன்னும் சில தினங்களில் ஆஸ்கர் விருது பெறும் முதல் தமிழர் எனும் பெருமையையும் பெறப்போகிறார்.
வாழ்த்துக்கள் ரஹ்மான்

Monday, February 2, 2009

தீக்குச்சி

ஈழத்தின் விடிவெள்ளிக்கு தீக்குச்சியாய் இருந்தவனே.... எங்கள் இதயத்தில் மட்டுமல்ல உலகத் தமிழனின் இதயத்தில் வீற்றிருக்கும் முத்துக்குமாரே. தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லட.
நீ தலையை மட்டும் மல்ல உன் உயிரையே எம்மக்களுக்காய் தந்துவிட்டாயே.
நாம் என்ன பரிகாரம் செய்யப்போகின்றோமோ தெரிய வில்லை நீ மூட்டியது தீயா அல்லது சுனாமியா என்று தெரியவில்லை ஆனால் அது ஒரு எழுச்சி என்றே சொல்லலாம்.
ஈழத்தில் இன்று ஏற்பட்டிருக்கும் நிலைமைக்கு இந்தியாவின் (மத்தியஅரசின்) நிலையில் மாற்றமில்லை. அது வரலாற்றில் மீண்டும் ஒரு தவறையே செய்கின்றது. அது முதலில் செய்த தவறுக்கே இன்னும் மன்னிக்கப்படாமல் இருக்கின்றது. அது இப்பொழுது மீண்டும் ஒரு தவறை செய்கின்றது.
ஈழத்தமிழனுக்கு தொப்புல் கொடி உறவாக இருக்கும் இந்தியாவே
நீ உனது கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவா? இல்லையேல் ஈழத் தமிழன் உன்னை ஒருபோதும் மன்னிக்கமாட்டான் ஏன் தமிழ் நாட்டில் உள்ள 7 கோடி தமிழ் மக்களும் உன்னை மன்னிக்க மாட்டார்கள்.
காந்தி தேசத்தில் அஹிம்சைக்கு இப்பொழுது மதிப்பே இல்லை. உண்ணாவிரதப் போராட்டங்களை மதிப்பதும் இலலை அவர்களின் கோரிக்கைகளுக்கும் மதிப்பும் இல்லை.
மத்திய அரசியன் வாலைப்பிடித்துக் கொண்டு அரசியல் நடத்தும் கருணாநிதிக்கு உலகத் தமிழர்களின் தலைவன் என்ற கனவு காண்பதை முதலில் விட்டு விடு.
ஈழத்தமிழனின் நலனில் அக்கைறகொள்வது போல் நடிக்காதே.. கனிமொழி ஈழத்தமிழர்களுக்காக ஒரு பக்கம் குரல் கொடுக்கின்றார். கருணாநிதி சோனியாவின் கதையேக் கேட்டுத் தலையசைத்துக் கொண்டிருந்து என்ன பலன்.
இன்று ஒரு முத்துக்குமார் நாளை எத்தனை முத்துக்குமார்கள் தமிழகத்தில் உருவாகப்போகின்றார்களோ தெரியவில்லை .
அப்படி உருவாக யார் காரணம்?
கருணாநிதியா மத்திய அரசா இரண்டும் ஒன்றுதானே 4 இலட்சம் தமிழர்கள் காடுகளின் மரநிழல்களில் வாழ்கின்றார். இது கூட அந்த கிழவனுக்குப் புரியவில்லையா?
விடுதலைப் புலிகளை அழிப்பதுதான் காங்கிரஸ்காரரின் ஒரு குறிக்கோள் அதற்கு வெளியில் நல்லவர்கள் போல் நடித்துக்கொண்டும் ஈழத்தமிழனை அழிப்பதற்கு இந்திய இராணுவத்தினை இலங்கைக்கு அனுப்பி சிங்களப் பேரினவாதத்தோடு சேர்ந்து இன அழிப்பை மேற்கொண்டுள்ளது.
அமைதிப்படைய என்று பெயரில் முன்பு வந்துவாங்கிக் கட்டிக்கொண்டுபோனது தெரியாதோ?
வல்லரசாக நீ நினைப்பது சரி அதற்காக ஒரு இனத்தை அழித்து நீ வல்லரசாக முடியும் என்றால் அது நீ கானும் பகல் கனவு.
தமிழ் நாட்டில் இன்று இளைய சமுதாயத்தில் மூண்டுள்ள இன பற்று ஏன் கொழும்பில் உள்ள தமிழர்களுக்கு ஏற்படவிலலை.
கொழும்பில் உள்ள இளையசமுதாயமே நீ உனது இருப்பை இழந்து கொண்டு இருக்கின்றாய் என்று தெரியாமல் வில்லும்,படிக்காதவனும் பார்த்துக்கொண்டு திரிகின்றாய் தமிழ் நாட்டில் தீக்குழித்த முத்துக்குமாருக்கு நீ ஒரு தமிழனாய் என்ன செய்தாய்?
ஒரு நினைவஞ்சலிக்கூட்டம் ஆவது நடத்தினியா?
கொழும்பு தமிழ் சங்கமே ஈழத்தில் எம்மவர்கள் படும் வேதனை உனக்கு புரியவில்லையா?
ஆடலும் பாடலுடன் நீ நடத்தும் நாடகங்கள் என்ன உனக்காக ஒருவன் அங்கு உயிர் திறந்தானே அது கூட உனக்கு தெரியாதா? அவன் என்ன விடுதலைப் புலியா இல்லையே அவன் ஒரு தமிழன் .
கூட்டங்கள் தான் நடத்துவதற்கு பயம் வெள்ளை வானில் வந்து கடத்திச் சென்றுவிடுவார்கள் என்று நீங்கள் சொல்லுவதும் கேட்கின்றது. ஏன் ஒருவர் இருவர் என்று நடத்தாமல் ஒரு கூட்டமாகசேர்ந்து நடத்தினால் வெள்ளை வான் உங்கைள என்ன செய்யப்போகின்றது.
இன்று கொழும்பில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று சுயநலத்தோடு இருக்கின்றீர்கள்.
இளைய சமுதாயமோ.. களியாட்டங்களிலேயே தனது காலத்தை கடத்திக்கொண்டு இருக்கின்றது. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று அவர்களுக்கே தெரியாது.
நாளைய சமுதாயமே உன் கையில் தான் இருக்கின்றது. முத்துக்குமாருக்கு வந்த ஆத்திரம் வெறி உனக்கு வரவில்லையா? மானம் கேட்டவனே…

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...