Friday, December 19, 2008

கடலை போடுவது ஆபத்தா?

கடலை.... ஏதோ பீச்சில விற்கின்ற கடலை என்று நினைக்கவேண்டாம். இந்த வார்த்தை கையடக்கத் தொலைபேசியை எப்போது கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கடையிலை கடலை விற்பனை செய்யப்படுகிறதோ இல்லையோ இந்தப் போனில் போடுகிற கடலை மட்டும் அளவு கணக்கில் இல்லை.
ஏன் கடலை போடுகின்றார்கள்?
எதற்காக போடுகின்றார்கள்?
யார் போடுகின்றார்கள்?
என்று பார்தால் அது ஒரு 100 க்கு 75 வீதமானவர்கள் இளைஞர்கள் தான் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
(ஏதோ இவர் மட்டும் உத்தமர் நாங்கள் எல்லாம் கடலை போடுகின்றதை எழுத வந்துட்டார் என்று நீங்கள் மனசுக்குள் திட்டுவது தெரிகின்றது என்ன செய்ய.......)
ஆண் பெண் உறவில்தான் கூடுதலான நேரத்தை போனில் (கடலைபோடுவதை) கதைக்கின்றார்கள். இப்படிக் கதைப்பதால் நன்னையா தீமையா என்ற வினாவுக்கு நான் வரவில்லை. இன்றைய கலாசார மாற்றம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் தவழ்கின்றது ....சி....சி.. சிணுங்குகின்றது இந்த செல்போன்கள்.கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படும் இருபாலாரும் தமக்குச் சுதந்திரம் கிடைப்பதில்லை என்று அங்கலாய்ப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு ஒரு செல்போன் கிடைத்தால் போதும் அவர்களின் உணர்வுகளின் பகிர்வை மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள்.அன்றாடம் நடக்கும் விடயங்கள் சம்பவங்கள் பற்றி தமது நண்பர்களோடு கதைப்பார்கள். ஓ.கே. கதைப்பது சரிதான் ஆனால் சில விடயங்கள்..... என்ன இழுக்கின்றனா... ஏதாவது ஆபாசமாக எழுதப்போறானோ என்று நினைக்க வேண்டாம்....ஒவ்வொரு நாளும் செல்போனில் திரும்ப திரும்ப ஒரு விடயம் பற்றிக் கதைப்பது அவர்களுக்கு ஒருவித சலிப்பையே ஏற்படுத்திவிடுகின்றது.
அதனால் அவர்களது அடுத்து என்ன கதைக்கலாம் ... என்ன உலக விடயங்களைப் பற்றி ஆராயவா போகின்றார்கள். அப்படி ஆராயப்போனால் சில நிமிடங்களிலேயே அவர்களது உரையாடல் முடிந்துவிடும்.
என்னடா மணிக்கணக்காக.... கதைக்கின்றார்கள்... என்னத்தைத்தான் அப்படிக் கதைக்கின்றார்கள் என்ற வினா பலரிடம் உள்ளது.சிலர் பாட்டுப் படிப்பார்கள்சிலர் கதை சொல்வார்கள்சிலர் கவிதை வாசிப்பார்கள் என்ன சின்ன சஞ்சிகையையே போனில் சொல்லிவிடுவார்கள். அப்படியொரு கதை.
இன்னும் சிலரோ ஒரு படிமேல்போய்.... இரட்டை அர்த்த வசனங்கள் கதைக்கின்றார்கள்.... அவர்கள் முதலில் இரட்டை அர்த்த வசனங்களை கதைக்கும்போது அதை அந்த ஆணோ அல்லது பெண்ணோ ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் வெளிப்படையாகவே அதாவது செக்ஸைப் பற்றி கதைக்கின்றார்கள்.
இதனால் தான் ஆபத்து ஆரம்பிக்கின்றது என்று சொல்லலாம். செக்ஸ் கதைகள், செக்ஸ் எஸ்.எம்.எஸ்.க்கள் பரிமாற்றம், இந்தப் பரிமாற்றம் அவர்களது நடத்தையிலும் மாற்றங்களைக் கொண்டுவருகின்றது. நேரில் கதைக்க முடியாத தங்களது ஆதங்கங்களை தொலைபேசியூடாக தீர்ப்பதனால் இவர்களது காமப்பசி அடங்கிவிடும்போல.. சிலர் வாழ்க்கையில் தவறிப்போவதற்கும் இதுவும் ஒரு காரணம்.தனிமையில் இருப்பவர்கள் கூடுதலாக இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர்.இளைஞர்களின் திருவிளையாடல்என்ன சிவாஜி, திருவிளையாடல் என்று நினைக்க வேண்டாம். கொமினிக்கேஷனில் ரிலோட் போடும் பெண்களின் தொலை பேசி இலக்கங்களை எடுத்து எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்பு கொள்ளுதல். தவறுதலாக டயல் செய்துவிட்டேன் என்று கதைப்பது என்று தமது திருவிளையாடல்களை அரங்கேற்றுகின்றனர். அதுமட்டுமா சிலர் கணவன் வெளிநாட்டில் இருக்கின்ற மனைவிமாரை தங்களது வலையில் வீழ்த்துவதற்காக செல்போன்களை பாவித்து அவர்களுடன் இரவில் உரையாடுதல், அதுவும் இரவு 11 மணிக்கு ஆரம்பித்தார்கள் என்றால் அதிகலை 2, 3 மணி வரையும் தொடர்வது, அதில் இளைஞர்களைச் சொல்லிக் குற்றமில்லை ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழைய முடியும். அவ்வாறு ஏன் பெண்கள் நடந்துகொள்கின்றார்கள். அதற்காக ஆண்கள் மட்டும் நல்லவர்கள் இல்லை. அவர்கள் ஏன் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்களோ தெரியவில்லை.கடலைபோடுவதும் ஒரு மனநோய் என்று சொல்லலாம். ஒரு இரவு செல்போன் கதைக்காமல் விட்டாலே சிலர் பைத்தியம் பிடித்ததுபோல் ஆகிவிடுகின்றனர். இதற்கு அவர்களுக்கு செல்போன் சிணுக்கலில் கிடைக்கும் அன்பு என்றுதான் சொல்லவேண்டும்.அன்புக்கு அடிபணியுங்கள் சரி. ஆனால் அந்த அன்பு ஆபத்தில் முடியாதவரை உங்களது செல்போன் சிணுங்கல்களை குறையுங்கள்.... அதனால் உங்களுக்கு வரும் ஆபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.கடலைபோடுங்கள் ஆனால் அளவோடு போடுங்கள்.

Saturday, December 13, 2008

இப்படியும் குளிக்கின்றார்களாம்....




இந்தக்குளிரிலும் இப்படிக் குளிக்க இவர்களுக்கு எப்படித்தான் மனம் வந்துச்சோ தெரியவில்லை.
( என்னடா இவன் குளிக்கேலையா என்று நினைக்க வேண்டாம்)சீனாவின் Liaoning என்னுமிடத்தில் ஆறு பனிக்கட்டிகளாக உறைந்துபோய்யுள்ளது. அதில் குளிப்பதற்கு இவர்களுக்கு வந்த ஆசையினால் ஆற்றில் உள்ள பனிக்கட்டிகளை வெட்டி அதற்குள் குளிக்கின்றார்கள் நீச்சல் வீரர்களாம் இவர்கள்.

ஒபாமா அலையாம்........
















Monday, December 8, 2008

நட்பு.........................




நட்பைப்பற்றி நண்பர்களுடன் விவாதித்துவிட்டு வருகின்றேன் என்றேன்.விவாதித்தேன்...... சும்மா வந்து விழுந்த அம்புகள் என்னைக்குத்திவிட்டன. அதனையும் எனது நண்பர்கள் எனக்குத்தந்த முத்துக்கள் (எனது அறிவுக்கு) என்றுதான் சொல்ல வேண்டும். (உங்களுக்கு அது முத்தோ இல்லையோ எனக்குத் தெரியாது முத்தாகப் பட்டால் வாழ்த்துங்கள் இல்லையேல் நல்லாகத் திட்டுங்கள்.)

புரிந்துணர்வு... நண்பர்களுக்கிடையில் வருவது முக்கியம் ... புரிந்துகொண்ட நண்பர்கள் இன்று எத்தனை பேர் காதலர்களாகவும் எத்தனை பேர் கணவன் மனைவியாகவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அத்தனைக்கு அவர்களது புரிந்துணர்வுதான் காரணம்.

விட்டுக்கொடுப்பு...
ஐயோ சாமி இந்த வார்த்தையைக் கேட்டால் எனக்கு கோபம்கோபம்தான் வரும் ஏன் என்றால் நான் அதிகமாக விட்டுக்கொடுத்திருக்கின்றேன்.. அதனால் பிரச்சினைகள் வராமல் இருந்திருக்கின்றது.ஆனால் நான் விடுக்கொடுக்கும்போதேலாம் அதை எனது நண்பர்கள் இவனுக்கு சூடு சுறனை இல்லை என்று திட்டுவார்கள். இவனுக்குகோபமே வராதா? இவன் எல்லாம் ஒரு மனிதனா என்றேலாம்..... கேவலப்படுத்தியிருக்கின்றார்கள் நான் எதனையும் காதில் போட்டுக்கொள்வதில்லை.ஏன் என்றால் எனது நண்பன்தானே எனது நண்பிதானே நாளைக்கு எனக்கு அவர்கள் முக்கியம் நான் கோபப்பட்டு ஒருவார்த்தை சொன்னால் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியுமோ தெரியாது. அப்படி நான் எதாவது சொன்னால் எமது நட்புக்குள் கலங்கம் வந்துவிடுமோ என்றுதான்.ஆனால் என்னை புரிந்த நண்பர்கள் புரியாத நண்பர்கள் என்று எத்தனை விதம் அத்தனைக்கும் விட்டுக்கொடுப்புகள்தான் காரணம் .என்னடா சொந்தப்புராணம் பாடுறானே என்று நினைக்க வேண்டாம்.... விட்டுக்கொடுங்கள் உங்கள் நண்பனுக்கு நண்பிக்கு.... ஆனால் அதையும் ஒரு அளவுகோலோடுதான் விட்டுக்கொடுக்க வேண்டும். (நட்புக்கு மரியாதை என்று சினிமா டயலொக் ஒன்றும் அடிக்கவேண்டாம்)

ஈகோ.... உங்களது நண்பனுடன் நண்பியுடன் சிறு சிறு சண்டைகள் வருவது வழக்கம்தான் ஆனால் யார் முதலில் கதைப்பது அவன்பெரியதா நான் பெரிதா அவள் பெரிதா நான் பெரியதா என்ற ஈகோ...
கிளம்பிட்டான் ஐயா கிளம்பிட்டான் இது உங்களை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் பேய் என்று சொல்லலாம் உங்களிடத்தில் ஏன் இந்த ஈகோ குடிகொள்ளுதோ தெரியவில்லை.
புகைப்பதும்
மது அருந்துவதும்
மாதுவிடம் செல்வதும்
இதை எல்லாத்தையும் விட ஈகோ மிக கொடுமையானது கிடையாது என்பதுதான் எனது கருத்து.ஒரு சின்ன உதாரணம் தரளாம் என்று நினைக்கின்றேன்:
ரஜனியை எதிர்த்து ஜெயலலிதாவின் கட்சியில் பிரசாரம் செய்தவர் ஆச்சி மனோராம்மா.. ரஜனி இருக்கின்ற உயரம் என்ன மனோராம்மா இருக்கின்ற உயரம் என்ன? அது உங்களுக்குத்தானே தெரியும்.
ரஜனிக்கு ஈகோ இருந்திருந்தால் மனோரம்மாவை என்ன செய்திருக்கலாம்.ஆனால் தனது அருணாச்சலம் படத்தில் நடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கினார்.அன்றுதான் செய்த தப்பை உணர்ந்து மனம் வருந்தியவர் மனோராம்மா.
ஆனால்.....................................................
உங்களுக்கு எது சரி என்று பட்டதை நீங்கள் செய்வதை விட .உங்களது நண்பர்களுடன் கலந்து ஆலோசியுங்கள் அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
தோழ் கொடுப்பான் தோழன் என்று சும்மாவா சொன்னார்கள். ஆனால் நீங்கள் அளவோடு தோழ்கொடுங்கள்.... என்றுதான் சொல்லதோன்றுகின்றது...ஏன் என்றால் எனது நண்பன் ஒரு உதாரணம் சொன்னான் அதான்... நீங்கள் உங்களது நண்பன்தானே நண்பிதானே என்று நீங்கள் விட்டுக்கொடுத்தால் அதுவே உங்களுக்கு சில வேளை ஆபத்தாக அமைந்துவிடலாம்.
நாயை தூக்கி மடியில் வைத்தால் அது கட்டாயம் நக்கித்தானே தீரும்..
நாயே இப்படி இருக்கும்போது ஆறு அறிவுபடைத்தவர்கள் மனிதர்கள்.
நட்புக் கொள்ளுங்கள் அது உங்களை எவ்வளவு பாதிக்கும் என்பதைப் பார்த்துசெயற்படுங்கள்....ஏன் என்றால் சினிமா துறையில் எத்தனை நண்பர்கள் இன்றைய திகதியில் பிரிந்துசெல்கிறார்கள் எம்.எஸ்.வி. -ராமமூர்த்தி தொடக்கம் இன்றைய ஹரிஸ் ஜெயராஜ்-கௌதம், யுவன்-செல்வராகவன் என்று நீண்டுகொண்டுதான் இருக்கின்றது.
ஆகவே நட்பு அது நிலைக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்களது நண்பனோடோ நண்பியோடோ வெளிப்படையாக இருங்கள் ஆனால் வெகுளியாக இருக்காதீர்கள்.

Friday, December 5, 2008

தோழா தோழா


தோழா தோழா தோழ்கொடு தோழா.. என்ன பாட்டுப்பாடுறன் என்று நினைக்கவேண்டாம். காதலைப் பற்றிப்போட்டுவிட்டானே... நட்பைப்பற்றிப்போடவில்லையே இவனுக்கு நண்பர்கள் இல்லையோ நட்பைப்பற்றி இவனுக்கு என்ன தெரியும் என்றேல்லாம் திட்ட வேண்டாம்.
மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் நண்பர்கள் அறிமுகமாகிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்களில் எத்தனைபேர் இன்று உங்களுடன் தொடர்புகளை வைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று பார்த்தால் அது மிகக்குறைவாகவே இருக்கின்றன.
ஆரம்பத்தில் பாடசாலை முதல் நீங்கள் பல்கலைக்கழகம் முடிக்கும் வரை எத்தனை பாடசாலைகள் எத்தனை கல்விநிறுவனங்கள்எத்தனை நண்பர்கள்.... அத்தனையும் பசுமையின் சின்னங்கள்.
அதன் பின் தொழில் சார் நண்பர்கள் என்று உங்களின் நட்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
ஆண், பெண் நட்பு அது இன்று சர்வசாதாரணமாகிவிட்டதொன்று. 15 ஆண்டுகளுக்கு முன்பென்றால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நட்பாக பழகுவதே ஒரு செய்தி-ஒரு பரபரப்பு- அவர்களை தவறான பார்வையில் பார்ப்பதும் நோக்குவதும் சமூகத்தில் இருந்து வந்தது.
ஆனால் இன்று அது கால ஒட்டத்தில் மறைந்து போய்விட்டது.நமது கலாச்சாரம் வெளிநாட்டின் கலாசாரத்தில் ஒன்றிப்போய்விட்டது என்றுதான் சொல்லத்தோன்றுகின்றது.ஒரு ஆண் பல பெண்களுடனும் ஒரு பெண் பல ஆண்களுடனும் நட்பாக பழகலாம் அதில் எந்தத் தப்புமில்லை ஆனால் ஒரு வரையறைஎன்பது கட்டாயம் தேவைப்படுகிறது.நண்பர்களுக்கிடையில் ஒளிவு மறைவு என்பது இருக்கக்கூடாது.கணவன் மனைவிகள் கூட தங்களுக்குள் சில விடயங்களை பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.ஏன் நீங்கள் கூட ஒரு விடயத்தை உங்களது பெற்றோர்களிடம் பகிர்ந்துகொண்டீர்களா நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்...“நான் எனது அப்பா அமமாவுக்கு எல்லா விடயத்தையும் பகிர்ந்துகொண்டிருக்கிறேன் என்று.பதில் இல்லையென்டுதான் வரும்.பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத விடயத்தையும் நாம் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கின்றோம்.அவ்வாறு நீங்கள் பகிர்ந்துகொள்ளும் விடயங்கள் நல்லதோ கெட்டதோ ..... உங்களது மனோ நிலையும் அந்த விடயத்தை நீங்கள் நோக்கும் பொழுது அது உங்களைப் பாதிக்கும் விதமும்தான் முக்கியம்.நீங்கள் நட்புக்கொள்ளும் நண்பர்கள் அனைவரையும் நீங்கள் நண்பர்களாகக் கொண்டாலும் நீங்கள் உங்களது வட்டத்திற்குள் சிலரையே வைத்திருப்பீர்கள். அவ்வாறு வைத்திருக்கும் நண்பனோ நண்பியோ....தான் உங்களது துன்பத்திலும் இன்பதிலும் பங்குகொள்கின்றார்கள்.அதற்காக மற்றவர்கள் பங்குகொள்ள மட்டார்கள் என்று இல்லை..என்னதொடர் கதையா என்று நினைக்க வேண்டாம்....நண்பர்களிடம் நான் இதைபற்றி விவாதித்து விட்டு தொடர்வேன்.

Tuesday, December 2, 2008

துளிகள்


யார் இந்த நாராயணன்?

இந்திய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரியும் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலோசகர் இவர்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் போராட்டத்தை சீர் குலைக்க மத்திய அரசுடன் செயல்படுவருபவர். தமிழ் நாட்டில் உளவு துறையை மிகவும் சதூரியமாக கையாளக்குடிய நபர் இவர்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காக இந்தியா சென்று காத்துக்கிடந்தனர். ஈழத்தின் அவல நிலைமைகளை பிரதமருக்கு சொல்வதற்காக இருந்தனர். அப்போது அவர்களை சந்திக்க விடாமல் செய்தவரும் இவர்தான்.
அப்படிப்பட்ட இந்த நாராயணன். கியூபாவில் நடைபெற்ற அணிசேர நாடுகளின் மாநாட்டில் இலங்கை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவை பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பதற்கு ஏற்படு செய்துகொடுத்தவர்.
தமிழர்களின் நலனில் அக்கறையில் துளி கூட விரும்பம் இல்லை இந்த நாராயணனுக்கு இவர் தனது பெயரை நரதர் என்று மாற்றி வைத்திருக்கலாமே?
இலங்கையில் உள்ள சிங்கள ஆங்கில ஊடகங்கள் எம்.கே.நாராயணன் மன்மோகன்சிங்கின் பாதுகாப்பு ஆலோசகராக பதவி ஏற்றபோது அவரைப்பற்றி புகழ்ந்து தள்ளின.
ஏதோ இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய வீரன் என்ற எண்ணத்தில் அவர் மீது அவ்வளவு பாராட்டு மழை.
பின்ன அவருக்கு இதைக் கூடாச் செய்யாவிட்டால் தேச தூரோகம் ஆகிவிடும் அல்லவோ?
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டக் காரணமாக இருந்தவர்கள் இருவர் (நரிகள்) ஒருவர் டிஸ்சித்தும் நாராயணணும்தான்.
இவர்கள் இருவரின் வழிகாட்டுதல்தந்திரம் போன்ற காரணங்களினால்தான் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கைக்கு வந்ததும். உலக அரங்கில் அது அவமானப்பட்டு திரும்பிப்போனதுக்கும் இவர்களின் இராஜதந்திரங்களே காரணம்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் அவசரமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று விடுதலைப் புலிகளின் தலைவரை நிர்ப்பந்த்திற்குள் உள்ளாக்கி எப்படியாவது இதற்கு சம்மதிக்க வேண்டும் என்று பாடுபட்டவர் இந்த நாராயணன்.
ஆனால் அது பலிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
விடுதலைப் புலிகளை தீவிரவாத செயல்களில் ஈடுபடும் ஒரு அமைப்பு என்று உலக அரங்குகளில் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டவர்.
90 களில் தமிழ் நாட்டில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதற்கும் நாராயணன் மேற்கொண்ட சதிதான் காரணம்.
தி.மு.க தலைவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருக்கு என்று அறிக்கை சமர்ப்பித்தவரும் இந்த நாராயணன்தான்.
அதனால் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் வேண்டப்படாத நபர்களில் நாராயணணும் ஒருவர்.
அதன் காரணமாக கருணாநிதியை சந்திப்பதற்கு நாராயணன் பலமுறை முயற்சி செய்தும் அவர் அதை மறுத்து வந்தார்.
ஆனால் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலோசகரா வந்த பின் கட்டாயம் அவரை சந்திக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கருணாநிதிக்கு.
இலங்கையில் இடம் பெற்ற சார்க் மாநாட்டில் தனியார் காரில் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் சென்றவர் என்ற பெருமை நாராயணனையே சாரும் அவ்வளவு அவருக்கு இலங்கை மீது நம்பிக்கையாம்?
நாராயணன் (நரி) பற்றி மேலும் பல விடயங்கள்.... வரும்

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...