Thursday, March 19, 2009

காதலின் பரிமாணங்கள்


காதல் இந்த வார்த்தையை சுவாசிக்காத இதயமும் இல்லை உச்சரிக்காத இதழ்களும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.கண்டதும் காதல்,கேட்டதும் காதல், பார்ததும் காதல், பார்க்காமல் காதல், ரெலிபோன் காதல், ஈமெயில் காதல் என்று காதலின் பரிமாணங்கள் வளர்ந்துகொண்டு தான் செல்கின்றன.


ஆனால் காதல் காதலாவே இருக்கின்றது என்றுதான் சொல்ல முடிகின்றது.எத்தனை பரிமாணவளர்ச்சியைத் தொட்டாலும் இன்று எத்தனை காதல் திருமணத்தில் முடிந்திருக்கின்றது. சரி திருமணத்தில் முடிந்த காதலும் கடைசிவரைக்கும் நிலைக்கின்றதா என்பதுதான் இன்றைய கேள்வி.அதுசரி இவர் பெரிய பருப்பு காதலைப் பற்றி சொல்ல வந்திட்டார் என்று நீங்கள் நினைக்கிறது தெரிகிறது.


சரி வந்த விஷயத்துக்கு வருவோம்.காதலால் பலர் கவிஞர்கள் ஆகின்றார்கள் சிலர் பைத்தியக்காரர்கள் ஆகின்றனர்.


அதிகமாக காதலால் பாதிக்கப்படுவது பெண்களா ஆண்களா என்று கேட்டால் ஆண்கள்தான் என்று பதில் வருகின்றது.ஆனால் பெண்கள் பாதிக்கப்படுவதில்லையா என்றுகேட்டால் பாதிக்கப்படுகின்றார். அவர்கள் தங்களது உணர்வுகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல முடியும்.மனதில் ஏற்பட்ட முதல் காதல் முதல் முத்தம் போன்றது அது ஆணோ பெண்ணோ அவர்களின் இதயத்தில் இருந்து அழிக்கமுடியாது.


ஆனால் அவற்றை அவர்கள் அழித்ததுபோன்று நடிக்கின்றார்கள் என்பதுதான் நிஜம்.காதல் அழிப்பதற்கு ஒன்றும் தூரிகையால் வரைந்த ஓவியம் இல்லை. கற்களில் செதுக்கிய சிற்பம்.இன்று சில பேர் காதல் என்ற பெயரை தங்களது சுயலாபத்திற்காகவே பயன்படுத்திக் கொள்கின்றனர்.


பலர் தமது வாழ்க்கை என்றே கொள்கின்றார்கள்.இன்னும் சிலரோ எதோ ரைம்பாசிங் என்று சொல்கின்றனர்.அவ்வாறு செய்பவரை நீங்கள் இனம் கண்டு ஒதுங்கிக்கொண்டால்.. தேவதாஸ் ஆக மாறமல் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.காதல்... அன்பு ... பாசம் எதோ ஒத்தசொல் எழுதுகிறான் என்று நினைக்கவேண்டாம்.


ஒருவனோ ஒருத்தியோ பழகும்பொழுது முதலில் நட்பாகத்தான் பழகுவார்கள்... அதன் பின் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்படுகின்ற புரிந்துணர்வு ஏன் இவனை நான் கணவனாக அடையக்கூடாது.


இவளை நான் மனைவியாக அடையாக்கூடாது இப்படி அவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணைக்கு ஒரு நல்ல மனிதன் கிடைக்கின்றபொழுது அதை அவர்கள் காதலிக்கின்றார்கள். இதனால் அவர்கள் வெற்றி பெற்று திருமணம் முடிக்கின்றார்கள்.

காதல்... அது சுகமான, சுமையான, இதனாமான, ஒரு சுவை என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.காதலர் தினம் முன்பு வெளிநாடுகளில் கொண்டாடப்பட்டது.


இன்று அது நம்மூரையும் விட்டுவைக்கவில்லை. காதலர் தினத்தில் பல பெண்கள் தங்களது உயிரைப்பிடித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.எவன் வந்து எனக்கு I love you சொல்லப்போறானோ தெரியவில்லையே என்ற பயம்தான்.


தமது காதலை காதலர் தினத்தில் சொல்கிறார்கள். ஏனோ அன்றுதான் அவர் களுக்கு நல்ல நாள் போலும்.தனது மனத்துக்குப்பிடித்தவன் அன்று I love you சொல்வான் என்று ஏங்கிய இதயங்கள் எத்தனை.காதலர்கள் இயற்கையின் அழகை ரசித்திக்கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் ரசிக்க மாட்டார்கள் என்று இல்லை.


காதலர்களுக்கு அது ஒரு தனித்துவம். அந்த இயற்கையில் தங்களையும் இணைத்துக்கொள்வார்கள்.


தனிமையையே கூடுதலாக காதலர்கள் விரும்புகின்றார்கள். நிலவினை ரசிக்கும் காதலர்கள் நீலாம்ரோங்கைவிட விரை வில் சென்று வரக்கூடியவர்கள் என்று தான் சொல்லத்தோன்றுகின்றது.தோல் மீது தோல் சாயும் இந்தக் காதல்......
இந்தக்காதல்......
பொறுங்கோ வாரேன்.....
உணர்வினால் இணையுமா? அல்லது உடலினால் இணையுமா? அல்லது காற்றோடு போய்விடுமா?உணர்வினால் இணையும் காதல்.... ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.... நிமிடங்கள் பொழுதுகள் கற்பனைக்கோட்டையிலே மிதக்கும் இவர்களது காதல்.... அப்படி இவர்களது காதல் வளர்ந்துகொண்டிருக்கும் இவ்வாறானவர் களின் காதல்.... வெற்றிபெறும்.


ஆனால் இவ்வாறவர்களின் காதலும் தோல்வியுறுகிறே என்று நீங்கள் கேட்கிறது எனக்கு புரிகிறது.அவர்கள் எங்கோ ஒரு இடத்தில் தவறை விட்டிருக்கின்றார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.


சிலர் தெரிந்தும் செய்வார்கள் சிலர் தெரியாமல் செய்கிறார்கள். சிலருக்கு தினமும் ஒரே விதமான அன்பு கிடைப்பதை விட திடீர் என்று வித்தியாசமான அன்பு கிடைக்கும் பொழுது அவர்கள் அதன் மீது தாவுகின்றனரே என்று தான் தோன்றுகின்றது.


மனித மனம் குரங்குதானே....தாவாமல் என்ன செய்யும் .அதற்காக உண்மையான காதலர்கள் என்மீது கோபப்படக்கூடாது. நான் முதலிலே சொல்லிட்டேன் இது எனது பார்வை என்று...“உணர்வுகளின் சங்கமம் என்று சொல்லலாம் அவளையோ அவனையோ நீங்கள் நினைக்கும் பொழுது அதே நேரத்தில் அவர்களும் அவ்வாறு உணர்வார்கள் உண்மையான காதல்.


நான்பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்நீ பேச நினைப்பதெல்லாம் நான் பேசவேண்டும்என்ன Situation Song கா என்று நீங்கள் நினைக்கவேண்டும்.


2 அரை மணி நேர படத்திலேயே 6 பட்டு வருது நாமும் இரண்டு வரியை போட்டால் என்ன.....உடல்கள் இணையும் காதல்.....அதற்காக நீங்கள் கேட்கக்கூடாது உணர்வினால் இணைபவர்கள் உடலால் இணையமாட்டார்களா என்றுசிலர் காமத்தையே குறியாக வைத்துக் காதலிக்கின்றார்கள்.


அன்பு எனும் வலையை வீசி எத்தனையோ பெண்களின் ஆண்களின் வாழ்க்கையை நாசமாக்குபவர்களும் இருக்கின்றார்கள்.


இவர்களைப் பற்றி எழுதுவதை விட எழுதாமல் விடுவதே எவ்வளவோமேல் Dating காலாச்சாரம் மூலம் இன்று நமது கலாச்சாரம் மோசமடையவதற்கும் இதுவும் ஒரு காரணம் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.காதலர்கள் காதலியுங்கள்உங்கள் காதல் மற்றவர்களுக்கு இடையுறு விளைவிக்காமல் இருந்தால் சரி.பொது இடங்களில் உங்களது காமலீலைகளை அரங்கேற்றதீர்கள்.


நாளைய சமுதாயம் உங்களை உற்று நோக்குகின்றது என்பதை மட்டும் உணர்ந்து செயற்படுங்கள்.
காதல் புனிதமானது அதை மற்றவர்கள் கொச்சைப்படுத்திவிடாது பாருங்கள்.

No comments:

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து

  இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை த...